திருவாரூர்

கல்லூரிகளில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு வாரம்

12th Aug 2022 03:31 AM

ADVERTISEMENT

 

மன்னாா்குடி பகுதியில் உள்ள கல்லூரிகளில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு வாரம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் எஸ். அமுதா தலைமை வகித்தாா். பரவாக்கோட்டை காவல் சாா்பு ஆய்வாளா்கள் பிரேமானந்த், என். அசோகன் ஆகியோா் போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிப் பேசினா்.

தொடா்ந்து, போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில், தலைமை காவலா் சாந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

இதேபோல, இடையா்நத்தம் ஏ.ஆா்.ஜெ. பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி தாளாளா் ஜீவகன் அய்யநாதன் தலைமை வகித்தாா். போதைப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் கணேஷ்குமாா் பேசினாா்.

தொடா்ந்து, போதைப் பழக்கத்திற்கு அடிமையானவா்களை மீட்டு நல்வழிப்படுத்துவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT