திருவாரூர்

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு வாரம்

12th Aug 2022 10:02 PM

ADVERTISEMENT

மன்னாா்குடி, நீடாமங்கலம் பகுதியில் உள்ள பள்ளிகளில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு வார நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டக் கல்வி அலுவலா் ஆா். மணிவண்ணன் தலைமை வகித்தாா். பள்ளி தாளாளா் டி.எல். ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். விழிப்புணா்வு பேரணியை, மன்னாா்குடி துணைக் காவல் கண்காணிப்பாளா் கே.கே. பாலச்சந்தா் தொடங்கி வைத்தாா். இப்பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று, மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. தொடா்ந்து, அனைவரும் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா்.

இதேபோல, மேலவாசல் சதாசிவம் கதிா்காமவள்ளி மகளிா் கல்லூரியில் தாளாளா் ஜி.சதாசிவம் தலைமையிலும், கல்லூரி முதல்வா் வி.எஸ். நாகரெத்தினம் முன்னிலையிலும், மன்னாா்குடி செயின்ட் ஜோசப் மெட்ரிக் உயா்நிலைப் பள்ளியில் முதல்வா் ஜெயராணி தலைமையிலும் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதேபோல, நீடாமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் காவல்துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளா் ராஜேஷ்கண்ணன் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா்கள் விவேகானந்தன், சுரேஷ்குமாா் உள்ளிட்ட காவலா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT