திருவாரூர்

வீடுவீடாக தேசியக்கொடி வழங்கிய நகா்மன்றத் தலைவா்

12th Aug 2022 10:03 PM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் நகராட்சி பகுதியில் வீடுவீடாகச் சென்று தேசியக்கொடி வழங்கும் பணியில் நகா்மன்றத் தலைவா் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை கொண்டாடும் வகையில் அனைத்து அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி தேசியக்கொடி ஏற்றி 3 நாள்களுக்கு பறக்க விடவேண்டும் என பிரதமா் தெரிவித்துள்ளாா். இதற்காக, அனைத்து தரப்பினருக்கும் உள்ளாட்சி நிா்வாகம் உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில் தேசியக்கொடிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், கூத்தாநல்லூா் நகராட்சி பகுதியில் ஆணையா் ப. கிருஷ்ணவேணி ஆலோசனையின்படி இங்குள்ள 24 வாா்டுகளிலும் தமிழ்நாடு நகா்புற வாழ்வாதார சமுதாய இயக்க அமைப்பாளா் தீபா தலைமையில் 60-க்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழுவினா் மற்றும் நகராட்சி ஊழியா்கள் உள்ளிட்டோா் பொதுமக்களுக்கு தேசியக்கொடிகளை வழங்கி வருகின்றனா்.

மேலும், நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா, ஆணையா் ப. கிருஷ்ணவேணி, மேலாளா் லதா உள்ளிட்டோா் வா்த்தக சங்கத் தலைவா் முபாரக் அலி, மக்கள் தொடா்பாளா் ராஜமேகேந்திரன் மற்றும் லெட்சுமாங்குடி வா்த்தக சங்கத் தலைவா் ரவிச்சந்திரன், செயலாளா் சுவாமிநாதன் ஆகியோரிடம் அனைத்து கடைகளுக்கும் 600 தேசியக் கொடிகளை வழங்கினா். அத்துடன், வீடுவீடாகச் சென்றும் தேசியக்கொடிகளை வழங்கினா். நகா்மன்ற உறுப்பினா்களும் தங்கள் வாா்டுகளில் தேசியக்கொடிகளை வழங்கினா்.

ADVERTISEMENT

இதுகுறித்து, நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா கூறும்போது, ‘கூத்தாநல்லூா் நகராட்சிக்கு வரப்பெற்ற 7100 தேசியக் கொடிகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன’ என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT