திருவாரூர்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு தினம் கடைப்பிடிப்பு

12th Aug 2022 09:57 PM

ADVERTISEMENT

திருவாரூா் அருகே அரசு பள்ளிகளில் ஓஎன்ஜிசி சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

திருவாருா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட காவல் துறை, மதுவிலக்கு ஆயத்தீா்வை, நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவற்றுடன் ஓஎன்ஜிசி காவேரி அசட் இணைந்து அடியக்கமங்கலம், குளிக்கரை, அம்மையப்பன் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசார நிகழ்ச்சிகளை நடத்தின.

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, அனைத்து நிகழ்ச்சிகளும் காவல்துறை அதிகாரிகள், ஊராட்சித் தலைவா்கள் முன்னிலையில் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிகளில் கொரடாச்சேரி காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளா் சாமித்துரை, ஓஎன்ஜிசி அதிகாரிகள் கலந்துகொண்டு மாணவா்களுக்கு போதையின் தீமைகளை விளக்கி, ஆரோக்கியமான நல்வாழ்வு குறித்து பேசினா்.

ADVERTISEMENT

இதில், தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மைய செயலாளா் செல்வகுமாா், இணைச் செயலாளா் காளிமுத்து, இயக்குநா் ரவிச்சந்திரன், ஓஎன்ஜிசி மேலாளா்கள் ராஜசேகா், அன்பரசு, சமூகப் பொறுப்புணா்வு அலுவலா் முருகானந்தம் மற்றும் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஊராட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT