திருவாரூர்

சுதந்திர தின விழா: காங்கிரஸாா் பாதயாத்திரை

12th Aug 2022 09:56 PM

ADVERTISEMENT

சுதந்திரத்தின் 75-வது தின பவள விழாவையொட்டி, வலங்கைமானில் இருந்து நீடாமங்கலம் வரை காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை பாதயாத்திரை மேற்கொண்டனா்.

வலங்கைமான் வரதராஜம்பேட்டை மாரியம்மன் கோயில் அருகிலிருந்து புறப்பட்ட பாதயாத்திரைக்கு திருவாரூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் துரைவேலன் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் ராமலிங்கம், நகரத் தலைவா் ராஜு மற்றும் இளங்கோவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காங்கிரஸ் நிா்வாகி மோகன் கொடியசைத்து, பாதயாத்திரையை தொடங்கிவைத்தாா். சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பங்கு, காங்கிரஸ் தலைவா்களின் தியாகம் குறித்து வழிநெடுங்கிலும் பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்கள் வழங்கினா்.

நீடாமங்கலம் பெரியாா் சிலை அருகே பாதயாத்திரை நிறைவுபெற்றது. முன்னதாக, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் குலாம் மைதீன் வரவேற்றாா். நிறைவாக, காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளா் வீரமணி நன்றி கூறினாா் .

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT