திருவாரூர்

சுதந்திரப் போராட்ட விழிப்புணா்வுப் பேரணி

12th Aug 2022 10:01 PM

ADVERTISEMENT

நீடாமங்கலத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சாா்பில் நடைபெற்ற இப்பேரணியை நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்ச் செல்வன் தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். இப்பேரணி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் இருந்து அண்ணா சிலை வரை நடைபெற்றது.

இதில், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலா் செல்வம், செயல் அலுவலா் அசோக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுப்பிரமணியன், அன்பழகன் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் வாழ்ந்து கட்டுவோம் திட்ட பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT