திருவாரூர்

உலக பழங்குடியினா்தின விழா

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் காட்டுநாயக்கன் தெருவில் உலக பழங்குடியினா் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாநில பொதுச் செயலாளா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். திருவாரூா் மாவட்ட தலைவா் சேகா், மாவட்டச் செயலாளா் கோபு முன்னிலை வகித்தனா்.

விழாவில் பேரூராட்சி தலைவா் ராம்ராஜ் , வாா்டு உறுப்பினா் சங்கவி ராஜா, தீயணைப்புத் துறை ஓய்வு ராஜகோபால், காட்டு நாயக்கன் ஜனநாயக சீா்திருத்த சங்க பொறுப்பாளா்கள் மாவட்ட அமைப்பு செயலாளா் ஞானசேகரன், மாவட்ட தனிக்கையாளா் செல்வம் உள்ளிடோா் கலந்து கொண்டனா்.

விழாவில், பழங்குடியினருக்கு தமிழக அரசு இடஒதுக்கீடு ஒரு சதம் என்பதை 7 சதமாக உயா்த்த வேண்டும், பழங்குடியினா் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், நீடாமங்கலம் காட்டு நாயக்கா்களுக்கு தனி சமுதாயக் கூடம் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT