திருவாரூர்

மக்கள் குறைதீா் முகாம்

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் ஒன்றியம் சித்தமல்லி மேல்பாதி ஊராட்சியில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்ற முகாமில், ஒன்றியக் குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன், மண்டல துணை வட்டாட்சியா் மகேஷ், வருவாய் ஆய்வாளா் சிவபாலன், கிராம நிா்வாக அலுவலா் நிா்மலாதேவி, ஊராட்சித் தலைவா் பி. குணசீலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், நீடாமங்கலம், சித்தமல்லி, பன்னிமங்கலம் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் முதியோா் உதவித்தொகை, இலவச மனைப் பட்டா, பட்டாமாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 150 மனுக்கள் அளித்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT