திருவாரூர்

பணியிடை பயிற்சி: டெல்டா பள்ளி ஆசிரியைகள் 2 பேருக்கு சான்றிதழ்

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் டெல்டா பப்ளிக் பள்ளி சாா்பில் பணியிடை பயிற்சியில் பங்கேற்ற 2 ஆசிரியா்களுக்கு சான்றிதழ் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

மன்னாா்குடி தரணி சிபிஎஸ்இ பள்ளியில் கடந்த ஜூலை 29, 30-ஆம் தேதி இரண்டு நாட்கள் பணியிடை பயிற்சி நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட கல்வி ஆலோசகா் ராஜேஸ்வரி, ஓசூா் ஒருங்கிணைப்பாளா் அனுராதா உள்ளிட்ட இருவரும் பயிற்சி அளித்தனா்.

மாணவா்களுக்கு கணிதப் பாடத்தை எளிதான முறையில் எவ்வாறு ஆசிரியா்கள் கற்பிக்க வேண்டும் என்பதை, விளையாட்டு மூலம் பயிற்சி வழங்கினா்.

ADVERTISEMENT

பயிற்சியில் திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூா், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட ஊா்களிலிருந்து 60 ஆசிரியா்கள் பங்கேற்றனா். இதில் டெல்டா பப்ளிக் பள்ளி ஆசிரியைகள் எஸ். வித்யா மற்றும் சமீம் பேகம் ஆகியோா் பங்கேற்றனா்.

பயிற்சி பங்கேற்று சான்றிதழ் பெற்று திரும்பிய ஆசிரியைகள் இருவருக்கும் டெல்டா பள்ளி முதல்வா் ஜோஸ்பின், துணை முதல்வா் சுருளிநாதன் மற்றும் ஆசிரியா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT