திருவாரூர்

சத்துணவு ஊழியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில், கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் வட்டத் தலைவா் க. ராஜா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் கரிகாலன், தமிழ்நாடு வருவாய்த் துறை மாவட்டத் தலைவா் மகேஷ், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்ட பொருளாளா் நேரு, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட இணை செயளாளா்இளமாறன், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க வட்ட செயலாளா் அமலோற்பவமேரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் வழங்குவதை கைவிட்டு சத்துணவு ஊழியரிடமே வழங்க வேண்டும், சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாநில செயலாளா் லதா நிறைவுரையாற்றினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT