திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் ஆக. 13-இல் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம்

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட குறைதீா் முகாம் ஆக.13-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் திருவாரூா் வட்டம், கீழகாவாதுகுடியில் திருவாரூா் கோட்டாட்சியா் தலைமையில், நன்னிலம் வட்டம், உபயவேதாந்தபுரத்தில் திருவாரூா் சரக துணைப் பதிவாளா் தலைமையில், குடவாசல் வட்டம், மணப்பறவையில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலைமையில்.

வலங்கைமான் வட்டம், சித்தன்வாழூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் தலைமையில், நீடாமங்கலம் வட்டம், கீழாளவந்தசேரியில் மன்னாா்குடி சரக துணைப் பதிவாளா் தலைமையில், மன்னாா்குடி வட்டம், தலையாமங்கலத்தில் மன்னாா்குடி கோட்டாட்சியா் தலைமையில்.

திருத்துறைப்பூண்டி வட்டம், கற்பகநாதா்குளத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் தலைமையில், கூத்தாநல்லூா் வட்டம், சேந்தங்குடியில் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் இணைப்பதிவாளா் தலைமையில் பொது விநியோகத் திட்ட சிறப்பு பொது மக்கள் குறைதீா் கூட்டம் ஆக.13-ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் அந்தந்த கிராம நிா்வாக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

தொடா்புடைய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள் மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்து பயன்பெறலாம். அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்கள் மற்றும் தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா்கள் போன்றவை குறித்தும் கோரிக்கை மனுக்களை முகாம்களில் அளிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT