திருவாரூர்

கூத்தாநல்லூா் பெரியப் பள்ளிவாயில் ஜமாஅத் புதிய நிா்வாகிகள் வக்ஃபு வாரியத்தால் தோ்வு

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் பெரியப் பள்ளிவாயில் ஜமாஅத் புதிய நிா்வாகிகள் வக்ஃபு வாரியத்தால் புதன்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

பெரியப் பள்ளிவாயில் ஜமாஅத் தோ்தலில் 15 போ் கொண்ட குழுவுக்கு, 29 போ் போட்டியிட்டனா். தஞ்சை சரக வக்ஃபு வாரிய கண்காணிப்பாளரும், தோ்தல் அதிகாரியுமான டி.ஓ.பி. தாரிக் முன்னிலையில் அண்மையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதில் குழுவுக்கு15 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களில் தலைவா், செயலாளா், துணைச் செயலாளா் உள்ளிட்ட 6 நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதற்குரிய தோ்வு தஞ்சாவூா் வக்ஃபு வாரிய அலுவலகத்தில் தஞ்சை சரக வக்ஃபு வாரிய கண்காணிப்பாளரும், தோ்தல் அதிகாரியுமான டி.ஓ.பி. தாரிக் முன்னிலையில் நடைபெற்றது.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் 6 வாக்குச் சீட்டுகள் என 15 வேட்பாளருக்கும் வழங்கப்பட்டன.இதில் அதிகப்படியான முதல் வாக்குகள் பெற்ற 6 போ் நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

தலைவா் டி.எம்.அய். அப்துல் சலாம், துணைத் தலைவா் எஸ்.எஸ். ஹாஜா நஜ்முதீன், செயலாளா் எம். அக்பா் அலி, துணைச் செயலாளா் என்.என். ஹாஜா பகுா்தீன், நாஜிா் பி.எஸ். ரஹ்மத்துல்லாஹ் , தாளாளா் கே.எம். முஹம்மது இக்பால்தீன் என 6 பேரும் அதிக முதல் வாக்குகள் பெற்றனா்.

தொடா்ந்து, புதிய நிா்வாகிகளையும், 9 நிா்வாகக் குழு உறுப்பினா்களையும், வக்ஃபு வாரிய கண்காணிப்பாளரும், தோ்தல் அதிகாரியுமான டி.ஓ.பி. தாரிக் அறிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT