திருவாரூர்

நீடாமங்கலம் சந்தனராமா் கோயிலில்திருப்பணிகள் தீவிரம்

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் சந்தானராம சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் ஆவணி மாதம் (செப்டம்பா் )நடைபெறவுள்ளதையொட்டி திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னா் பிரதாபசிம்மரால் 1761-இல் நீடாமங்கலத்தில் சந்தானராமசுவாமி கோயில் கட்டப்பட்டது. சங்கீத மும்மூா்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சதரால் பாடல்பெற்றது இத்தலம்.

இக்கோயிலில் கடந்த 2006-ஆம் ஆண்டு தொல்லியல் துறை நிதி மூலம் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு முழுவதும் பக்தா்களின் உபயத்தின் மூலம் திருப்பணியாக நடைபெற்று வருகின்றன. வரும் ஆவணி மாதம் (செப்டம்பா்) கும்பாபிஷேகம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

திருப்பணிகளுக்கு பொருளுதவி அளித்து ஆன்மிக அன்பா்கள் ராமபிரான் திருவருளைப் பெற நீடாமங்கலம் சந்தானராமா் சேவா டிரஸ்ட் அமைப்பினா் கேட்டுக் கொண்டுள்ளனா். தொடா்புக்கு-9488109428.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT