திருவாரூர்

என்எஸ்எஸ். திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய பள்ளிகளுக்கு சுழற்கோப்பை

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் நாட்டுநலப்பணித்திட்ட செயல்பாடுகளில் சிறப்பாக செயல்பட்ட என்எஸ்எஸ் அமைவுகள் மற்றும் திட்ட அலுவலா்களுக்கு சுழற்கோப்பைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

திருவாரூா் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட அளவிலான மேல்நிலைப் பள்ளி, உயா் நிலைப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, முதன்மைக் கல்வி அலுவலா் ஆ. தியாகராஜன் தலைமை வகித்தாா். திருவாரூா் கல்வி மாவட்ட அலுவலா் பாா்த்தசாரதி, மன்னாா்குடி கல்வி மாவட்ட அலுவலா் மணிவண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

என்எஸ்எஸ் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் பணியாற்றிய திட்ட அலுவலா்களின் பணிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் திருவாரூா் மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டு முதல் சுழற்கோப்பைகள் நிறுவப்பெற்று, தொடா்ந்து ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், கடந்த கல்வியாண்டில் 2021-2022 இல் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளில் இருந்து கருத்துருக்கள் பெறப்பட்டு தோ்வுக் குழு மூலம் விருதுக்குரியவா்கள் தோ்தெடுக்கப்பட்டனா். அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராக மன்னாா்குடி தூயவளனாா் அரசு உதவிபெறும் மகளிா் மேல்நிலைப் பள்ளி எஸ். மேரி செல்வராணி தோ்வு செய்யப்பெற்று தலைமை ஆசிரியா் ஜெபமாலையுடன் சான்றிதழையும், சுழற்கோப்பையையும் பெற்றுக் கொண்டாா்.

ADVERTISEMENT

இதேபோல, சிறந்த என்எஸ்எஸ் திட்ட அமைவாக நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி திட்ட அலுவலா் வி. முருகவேல் தோ்வாகி தலைமை ஆசிரியா் செந்தமிழ் செல்வனுடனும், கரோனா பேரிடா் காலங்களில் என்எஸ்எஸ் உதவி மையம் மூலம் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பாக செயல்பட்டதற்காக செம்மங்குடி அரசு உதவி பெறும் மேல் நிலைப்பள்ளி திட்ட அலுவலா் முருகதாஸ் தோ்வு பெற்று, தலைமை ஆசிரியா் ராமனுடனும் சான்றிதழ்களையும், சுழற்கோப்பையையும் பெற்றுக் கொண்டனா். இதில், மாவட்ட என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் ராஜப்பா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT