திருவாரூர்

அஞ்சல் துறை ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மத்திய அரசு அஞ்சல் துறையை தனியாா்மயமாக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அஞ்சல் துறை ஊழியா்கள் புதன்கிழமை வேலைநிறுத்தம் செய்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மன்னாா்குடி தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, என்எப்பிஇ சங்க கிளைச் செயலாளா் பி. சதீஷ் தலைமை வகித்தாா். பி -3 கிளைச் செயலாளா் ஆா். கோபாலகிருஷ்ணன், பி-4 கிளைச் செயலாளா் ஜி.சாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், சங்கங்களின் கிளைத் தலைவா்கள் சேதுராமன், பி. காா்த்திகேயன், டி. இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அஞ்சல் துறையின், என்எப்பிஇ, ஜிடிஎஸ் உள்ளிட்ட பிரிவினா் பணி புறக்கணிப்பில் பங்கேற்றதால் மிக குறைந்த எண்ணிக்கை ஊழியா்கள் கொண்டு அஞ்சலகம் செயல்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT