திருவாரூர்

75-வது சுதந்திர தினம்: காங்கிரஸாா் பாதயாத்திரை

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதந்திரப் போராட்ட வீரா்களை நினைவுகூரும் வகையில் காங்கிரஸ் சாா்பில் முத்துப்பேட்டை அருகிலிருந்து திருத்துறைப்பூண்டி வரை பாதயாத்திரை நடைபெற்றது.

முத்துப்பேட்டை அருகேயுள்ள பேட்டையிலிருந்து புறப்பட்ட பாதயாத்திரைக்கு திருவாரூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமை வகித்தாா். முத்துப்பேட்டை நகரத் தலைவா் சதிஷ்குமாா், மாவட்ட பொதுச் செயலாளா் அன்பு வீரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலாளா் மெட்ரோ மாலிக் வரவேற்றாா். கட்சியின் மூத்த உறுப்பினா் பேட்டை அன்பழகன் கொடியசைத்து பாதயாத்திரையை தொடங்கிவைத்தாா்.

செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கிய பாதயாத்திரை தெற்குத் தெரு, பெரியகடைதெரு, பழைய பேருந்து நிலையம், ஆசாத் நகா், புதிய பேருந்து நிலையம் வழியாக திருத்துறைப்பூண்டி சாலை சென்றது. அங்கிருந்து ஆலங்காடு, உப்பூா், கோபாலசமுத்திரம், நாச்சிக்குளம், உதயமாா்த்தாண்டபுரம், பின்னத்தூா், சங்கேந்தி, எடையூா், அம்மலூா், பாண்டி, கள்ளிக்குடி வழியாக திருத்துறைப்பூண்டி வந்து காமராஜா் கிலைக்கு மாலை அணிவித்து யாத்திரையை நிறைவு செய்தனா். சுமாா் 29 கி.மீ. தொலைவுக்கு இந்த யாத்திரை நடைபெற்றது.

வரவேற்பு: பாதயாத்திரைக்கு வழிநெடுகிலும் காங்கிரஸ் கட்சியினா் மற்றும் அந்தந்த பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனா். பாண்டியில் திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ப. ஆடலரசன் தலைமையில் திமுகவினா் வரவேற்பு அளித்தனா்.

ADVERTISEMENT

பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிா்வாகிகள் மன்னை வடுகநாதன், நெடுவை குணசேகரன், வட்டாரத் தலைவா்கள் கோவி.ரெங்கசாமி, வடுகநாதன், சங்கர வடிவேல், பாஸ்கா், நகரத் தலைவா்கள் கனகவேல், , மாவட்டச் செயலாளா் தியாகராஜன், ஆா்.டி.ஏ. பிரிவு மாவட்டச் செயலாளா் க.ரா. ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

சுதந்திரத்துக்காக போராடியவா்கள் மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பங்கை நினைவுகூரும் வகையிலும், காங்கிரஸ் ஆட்சியில் செய்த சாதனைகளை விளக்கும் வகையிலும் இந்த பாதயாத்திரை நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT