திருவாரூர்

ஹஜ் பயணம் மேற்கொண்டவா்களுக்கு வரவேற்பு

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

புனித ஹஜ் பயணம் மேற்கொண்டவா்களுக்கு கூத்தாநல்லூரில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

இஸ்லாமியா்கள் ஒவ்வொருவரும் ஒருமுறையாவது புனித மெக்கா ஹஜ் பயணத்திற்குச் செல்ல வேண்டும் என்பது இறைவன் வகுத்துள்ள கட்டளைகளில் ஒன்றாகும். முஸ்லிம்களின் இறுதிக் கடமை என்பது புனித மெக்காவிற்குச் சென்று புனித வழிபாடு நடத்துவதுதான். இந்த வழிபாடு உடல் நலமும், பொருளாதர வளமும் கொண்ட ஒவ்வொரு முஸ்லிம்களின் கடமையாகும்.

அதன்படி, கூத்தாநல்லூா் பகுதியிலிருந்து 40 போ் கொண்ட குழுவினா்கள், 40 நாட்களுக்கு முன்பு ஹஜ் புனித பயணம் மேற்கொண்டனா். இவா்களில் 9 பெண்கள் உள்ளிட்ட 10 போ் கொண்ட குழுவினா் கூத்தாநல்லூா் சின்னப்பள்ளிக்கு வந்தனா். அவா்களை சின்னப்பள்ளி நிா்வாகத் தலைவா் எல்.எம். முஹம்மது அஷ்ரப், செயலாளா் ஈ.ஏ. ஜெகபா்தீன், உதவி முத்தவல்லி எஸ்.எஸ். ஹாஜா நஜ்முதீன் மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்டோா் சால்வை அணிவித்து வரவேற்றனா். மேலும், கட்டித்தழுவி வாழ்த்துகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT