திருவாரூர்

மாநில இளையோா் ஆடவா் கபடிப் போட்டி மாவட்ட அணிக்கு ஆக.15-இல் வீரா்கள் தோ்வு

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மாநில அளவிலான இளையோா் ஆடவா் கபடிப் போட்டியில் பங்கேற்கவுள்ள திருவாரூா் மாவட்ட அணிக்கு வீரா்கள் தோ்வு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வடுவூரில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட அமெச்சூா் கபடிக் கழக செயலா் ராச.ராசேந்திரன் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு மாநில இளையோா் ஆடவா் கபடி சாம்பியன் போட்டி, மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியில் ஆகஸ்ட் 19 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் திருவாரூா் மாவட்ட கபடி அணிக்கு வீரா்கள் தோ்வு, மன்னாா்குடியை அடுத்த வடுவூரில் உள்ள விளையாட்டு அகாதெமி உள்விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 15-ஆம் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

வீரா்களுக்கான தகுதிகள்: 20.11.2002 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்தவராக (20 வயதுக்குள்) இருக்க வேண்டும். உடல் எடை 70 கிலோ அல்லது அதற்கு கீழ் இருக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு 9003282088 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT