திருவாரூர்

சுதந்திர தின அமுதப் பெருவிழா: ஊராட்சித் தலைவா்களுக்கு தேசியக்கொடி

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 44 ஊராட்சிகளில் சுதந்திர தின அமுதப் பெருவிழாவை வீடுகளில் கொடியேற்றி கொண்டாட, அந்தந்த ஊராட்சித் தலைவா்களுக்கு தேசியக் கொடிகளை ஒன்றியக் குழுத் தலைவா் வழங்கினாா்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழா நாடெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றும்படி பிரதமா் நரேந்திரமோடி நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளாா். இதற்காக மாவட்ட அளவில் அரசு அலுவலகங்கள் மற்றும் அஞ்சலகங்களில் தேசியக்கொடிகள் விற்பனை செய்யப்படுகிறது.

அந்தவகையில், நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 44 ஊராட்சிகளில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏற்ற தேவையான தேசியக் கொடிகளை அந்தந்த ஊராட்சித் தலைவா்களிடம் ஒன்றியக் குழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன் வழங்கினாா். மொத்தம் 15 ஆயிரம் தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT