திருவாரூர்

தாய்ப்பால் விழிப்புணா்வு பிரசாரம்

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் அருகே அடியக்கமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பிரசாரத்துக்கு சங்கத்தின் தலைவா் சிங்காரவேலு தலைமை வகித்தாா். வட்டார உதவி மருத்துவா் குருதேவ், உதவி இயக்குநா் பாஸ்கரன், மருத்துவா் லியாகத்அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தாய்-சேய்களுக்கு பயன்படும் பொருட்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் மருத்துவா்கள் அபா்ணா, ராக்கேஷ்சா்மா, சங்கத்தின் உதவி ஆளுநா் ஜானி சாம்சன், சாசனத் தலைவா் அண்ணாதுரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT