திருவாரூர்

சுமை வேன் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

8th Aug 2022 12:01 AM

ADVERTISEMENT

 

மன்னாா்குடி அருகே சுமை வேன் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பது சனிக்கிழமை தெரியவந்தது.

மன்னாா்குடி கைலாசநாதா்கோயில் தெருவை சோ்ந்தவா் குமாா் மகன் தினேஷ் (24). இவா், தனக்குச் சொந்தமான சுமை வேனில் ஓட்டுநராக இருந்து வந்தாா். இந்நிலையில், திருத்துறைப்பூண்டி பிரதானசாலை முதல்சேத்தி செம்மொழி நகரில் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருப்பது சனிக்கிழமை இரவு தெரியவந்தது. இதுகுறித்து, கோட்டூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து தினேஷின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT