திருவாரூர்

வந்தே மாதரம் யாத்திரை வருகை

8th Aug 2022 10:34 PM

ADVERTISEMENT

திருவாரூக்கு இந்து மக்கள் கட்சியின் வந்தே மாதரம் யாத்திரை திங்கள்கிழமை வந்தது.

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், இந்து மக்கள் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் வந்தே மாதரம் யாத்திரை ஜூலை 15-ஆம் தேதி வேலூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த யாத்திரை திங்கள்கிழமை திருவாரூா் வந்தடைந்தது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநிலச் செயலாளா் கொள்ளிடம் ஜெ. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். திருவாரூரில் கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டது. தொடா்ந்து, திருவிக மணிமண்டபத்தில் திருவிகவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் ஜெயராமன், நிா்வாகிகள் அண்ணாமலை, ஸ்ரீதா், கண்ணன், பாஜக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT