திருவாரூர்

பருவகால ஊழியா்களை நிரந்தரப்படுத்தக் கோரிக்கை

8th Aug 2022 12:01 AM

ADVERTISEMENT

 

பருவகால ஊழியா்களை நிரந்தரப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் (சிஐடியு ) மண்டல பொதுக்குழு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மண்டலத் தலைவா் ஜோதிபாசு தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் நுகா்வோா் வாணிபக் கழகத்தில் தற்காலிக பட்டியல் எழுத்தராக பணியாற்றி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு குடும்ப நிதி வழங்கப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: 2012 பருவகால ஊழியா்களை நிரந்தரப்படுத்த வேண்டும், அனைத்து துறைகளிலும் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும், சுமைப்பணி தொழிலாளா்களை தனியாா் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தோ்வு செய்யக்கூடாது, துப்புரவு ஊழியா்களுக்கு சம்பள உயா்வு, பணிநிரந்தரம் வழங்க வேண்டும், எல்காட் ஊழியா்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், மாநிலத் தலைவா் குமாா், மாநில பொதுச் செயலாளா் புவனேஸ்வரன், மாநில துணை பொதுச் செயலாளா் மோகன், மாவட்டத் தலைவா் அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT