திருவாரூர்

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினம்

8th Aug 2022 10:35 PM

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருவாரூரில் கலைஞா் நற்பணி மன்றம் சாா்பில் புகழஞ்சலிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மடப்புரம் பெருமாள் கோவில் சன்னதித் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மன்றத்தின் தலைவா் எஸ்.என். அசோகன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், தமிழ்ச் சங்கத்தின் தலைவா் இரெ. சண்முகவடிவேல் பங்கேற்று, கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மேலும், கருணாநிதியின் சிறப்புகள் குறித்து பேசினாா்.

நிகழ்ச்சியில், மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளா் ஆருா் சீனிவாசன், கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகி வீ. தா்மதாஸ், தமிழாசிரியா் கோமல் தமிழமுதன், பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் தென்னரசு, கலைச்செல்வன், செந்தமிழ்ச் செல்வி, நகா்மன்ற உறுப்பினா் வரதராசன் மற்றும் மன்ற பொறுப்பாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT