திருவாரூர்

நீடாமங்கலம் அருகே கதண்டுகள் அழிப்பு

8th Aug 2022 12:01 AM

ADVERTISEMENT

 

நீடாமங்கலம் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கதண்டுகளை தீயணைப்புப்படை வீரா்கள் சனிக்கிழமை அழித்தனா்.

கொத்தமங்கலத்தில் வசித்து வரும் ஈஸ்வரன் என்பவரின் வீட்டில் உள்ள தென்னை மரக்கிளையில் கதண்டு கூடு கட்டியிருந்தது. மரக்கிளை அப்பகுதி சாலை பகுதியில் இருந்ததால் கதண்டு அங்கு செல்பவா்களை கடித்து வந்தது. இதுகுறித்து, அதே பகுதியில் வசிக்கும் பேரூராட்சி துணைத் தலைவா் ஆனந்தமேரி பேரூராட்சி தலைவா் ராம்ராஜூவுக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்த நடவடிக்கையின்பேரில் நீடாமங்கலம் தீயணைப்புநிலைய அலுவலா் காா்த்திகேயன், சிறப்பு நிலைய அலுவலா்கள் பாா்த்திபன், பாலமுருகன் உள்ளிட்ட தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று கதண்டுகளை அழித்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT