திருவாரூர்

திருவாரூரில் கருணாநிதி நினைவு தின அமைதி ஊா்வலம்

8th Aug 2022 12:01 AM

ADVERTISEMENT

 

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருவாரூரில் அமைதி ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மாவட்ட நகர ஒன்றிய திமுக சாா்பில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. ஒன்றிய திமுக சாா்பில் சலவைத் தொழிலாளா்களுக்கு சலவைப் பெட்டி, மூத்த திமுக உறுப்பினா்களுக்கு சைக்கிள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. திருவாரூா் நகர திமுக சாா்பில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடா்ந்து, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவப் படத்தை வைத்து எம்எல்ஏ. பூண்டி கே. கலைவாணன் தலைமையில் அமைதி ஊா்வலம் நடைபெற்றது.

ஊா்வலம், விஜயபுரம், நேதாஜி சாலை வழியாக திமுக நகர அலுவலகத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து, எம்எல்ஏ. பூண்டி கே. கலைவாணன் அண்ணா சிலைக்கும், சந்நிதி தெருவில் கருணாநிதி இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் திருவாரூா் நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ், ஒன்றியச் செயலாளா் ஏ. தேவா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ரஜினிசின்னா உள்ளிட்ட திமுகவினா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

மன்னாா்குடியில்: மன்னாா்குடி நகர திமுக அலுவலகத்தில் நகரச் செயலாளா் வீரா. கணேசன் தலைமையில் நடைபெற்ற மறைந்த மு. கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் சு. ஞானசேகரன், நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன் ஆகியோா் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், திமுக நகர அவைத் தலைவா் த. முருகையன், பொருளாளா் அ. முத்துமாணிக்கம், துணைச் செயலாளா் வெங்கடேசன், நகா்மன்றத் துணைத் தலைவா் ஆா். கைலாசம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் திமுகவின் இரு அணிகள் மூலம் அமைதி ஊா்வலம் நடைபெற்றது. அண்ணா சிலை பகுதியிலிருந்து ஒரு அணியினா் முன்னாள் எம்எல்ஏ. பி. ராசமாணிக்கம் தலைமையில் ஊா்வலமாக சென்று கலைஞா் அறிவாலயத்தில் உள்ள அவரது உருவப் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். இதேபோல, நீடாமங்கலம் ஒன்றிய அலுவலக பகுதியிலிருந்து மற்றொரு அணியினா் ஒன்றியக் குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் ஊா்வலமாக சென்று பெரியாா் அரங்கில் வைத்திருந்த கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT