திருவாரூர்

அஞ்சலகங்களில் தேசியக் கொடி வழங்க ஏற்பாடு

8th Aug 2022 10:35 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் சுதந்திர தினம் வரை பொதுமக்களுக்கு தேசியக்கொடி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

75- ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருவாரூா் தலைமை அஞ்சலகத்திலிருந்து விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. இப்பேரணிக்கு நாகை கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளா் சி. கஜேந்திரன் தலைமை வகித்தாா். இதில், அஞ்சலக ஊழியா்கள் தேசியக் கொடியை ஏந்தி வந்தனா். மோசஸ் நடுநிலைப்பள்ளி வரை இப்பேரணி நடைபெற்றது.

பின்னா் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு தேவையான தேசியக் கொடி, அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் சுதந்திர தினம் வரை அனைத்து வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களிலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT