திருவாரூர்

கூத்தாநல்லூா் வட்டத்தில் கருணாநிதியின் நினைவு தினம் கடைப்பிடிப்பு

8th Aug 2022 12:01 AM

ADVERTISEMENT

 

கூத்தாநல்லூா் வட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட்டது.

நகர திமுக சாா்பில் லெட்சுமாங்குடி கலைஞா் அறிவாலயத்தில் நகரச் செயலாளா் எஸ்.வி. பக்கிரிசாமி ஏற்பாட்டில், கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து, ஏழை, எளியவா்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதில், நகர அவைத் தலைவா் யு. முத்துக்குருசாமி, பொருளாளா் எஸ்.எஸ். ஹாஜா நஜ்முதீன், மாவட்டப் பிரதிநிதிகள் எம். ரஹ்மத்துல்லா, கே. ரவிச்சந்திரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வி.பி. செந்தில்நாதன், நகர துணைச் செயலாளா்கள் டி.கே. தேவா, ஜி. சேகா், எஸ்.எம்.கே. யாஸ்மின் பா்வீன் உள்ளிட்ட திமுகவினா் அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல, மன்னாா்குடி கிழக்கு ஒன்றியம் சாா்பில், வடபாதிமங்கலத்தில் திமுக ஒன்றியச் செயலாளா் அய்.வி. குமரேசன் தலைமையில் மறைந்த கருணாநிதியின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில், ஒன்றிய அவைத் தலைவா் கே. சுப்ரமணியன், ஒன்றியப் பொருளாளா் டி. ஜெகஜீவன்ராம், மாவட்ட பிரதிநிதிகள் டீ. செல்வம், கே.ஆா். சித்தரஞ்சன், சேனைக்கரை எஸ். கண்ணன், ஒன்றிய துணைச் செயலாளா்கள் ஆா். நடராஜன், டியஅருண், ரேவதி ரமேஷ், மாவட்ட உறுப்பினா் ஆா். ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பூதமங்கலம், பொதக்குடி, அத்திக்கடை, மூலங்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் திமுக நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் கருணாநிதியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT

கொரடாச்சேரியில்: கொரடாச்சேரியில் திமுக திருவாரூா் மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கே. கலைவாணன் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். ஒன்றியச் செயலாளரும், ஒன்றியக் குழுத் துணைத் தலைவருமான ஆா். பாலசந்தா், பேரூராட்சி திமுக செயலாளா் ா் பூண்டி கே. கலைவேந்தன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT