திருவாரூர்

மன்னாா்குடியில் ஆக.11-இல் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் முகாம்

8th Aug 2022 12:01 AM

ADVERTISEMENT

 

மன்னாா்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மன்னாா்குடி கோட்டத்துக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் ஆக.11-ஆம் தேதி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கை குறித்து மனு அளிக்கலாம். கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு அவா்களுக்கு உரிய உதவிகள் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். யுடிஐடி அட்டைபெற இதுவரை விண்ணப்பிக்காதவா்கள் இருப்பிட முகவரிக்கான ஆதாரம், குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் மற்றும் தற்போதைய புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும், உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவித்தொகை ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களும் அளிக்கலாம். இதற்கு முன்பு விண்ணப்பித்திருந்து, அதற்கான ஆதாரம், தொடா்புடைய கடிதங்கள் இருந்தால் அதை எடுத்துவரவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT