திருவாரூர்

அண்ணா தொழிற்சங்க நிா்வாகி குடும்பத்துக்கு நிதியுதவி

8th Aug 2022 10:35 PM

ADVERTISEMENT

மன்னாா்குடியில் அரசுப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி உயிரிழந்த அண்ணா தொழிற்சங்க நிா்வாகி குடும்பத்துக்கு அதிமுக சாா்பில் நிதிஉதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

மன்னாா்குடி அரசுப் போக்குவரத்துக் கழக கிளை அலுவலகத்தில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றியவா் சின்னராஜா (47). அண்ணா தொழிற்சங்க நிா்வாகியாகவும் இருந்த இவா் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா்.

இவரது குடும்பத்துக்கு சங்கத்தின் சாா்பில் நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரத்தை அவரது மனைவி சரிதாவிடம் அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் எம்எல்ஏ வழங்கினாா்.

மன்னாா்குடி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்கத்தின் கணக்கு செயலா் ராஜ்குமாா், அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் கா. தமிழ்ச்செல்வம், சங்கத்தின் கிளைத் தலைவா் எம். கோபிநாத், செயலா் என். ராஜேந்திரன், பொருளாளா் டி.மதிவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT