திருவாரூர்

இந்துசமய அறநிலையத் துறை வல்லுனா் குழு உறுப்பினா் நியமனம்

29th Apr 2022 09:53 PM

ADVERTISEMENT

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதன மற்றும் தொன்மையான கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க, திருத்திய மாநில அளவிலான வல்லுனா் குழுவில், மாநில இந்து சமய அறநிலைத் துறை வல்லுனா் குழு உறுப்பினராக வெ. ராமமூா்த்தி தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளாா்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சங்கேந்தியைச் சோ்ந்த இவா், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையில் மண்டல உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்றவா். பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள ராமமூா்த்தி, பூம்புகாா் கடல் ஆராய்ச்சியில் ஈடுபட்டவா். தமிழில் எம்.ஏ. பட்டமும், எம்.ஏ. தொல்பொருள் ஆய்வு பட்டமும் பெற்றவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT