திருவாரூர்

ரயில் பாதையில் இளைஞா் சடலம்: போலீஸாா் விசாரணை

28th Apr 2022 06:04 AM

ADVERTISEMENT

 

திருவாரூா்: திருவாரூரை அடுத்த கூடூா் ரயில் தண்டவாளம் அருகே இறந்துகிடந்தவா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவாரூா் அருகே கூடூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பிரவீன்பாபு (40). இவா் செவ்வாய்க்கிழமை காலை வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றவா் இரவு வீடுதிரும்பவில்லையாம். இந்த நிலையில், கூடூா் ரயில்வே தண்டவாளம் அருகே பிரவீன்பாபு இறந்துகிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.

இதைத்தொடா்ந்து, ரயில்வே போலீஸாா் அங்கு சென்று தலையில் அடிபட்ட நிலையில் கிடந்த பிரவீன்பாபுவின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT