திருவாரூர்

மேலராதாநல்லூா் பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பான்

28th Apr 2022 10:23 PM

ADVERTISEMENT

கொரடாச்சேரி அருகே மேலராதாநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஜேசிஸ் சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பான் வியாழக்கிழமை அமைத்து கொடுக்கப்பட்டது.

பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் ரா.க. சரவணராஜன் தலைமை வகித்தாா். அமைப்பின் மண்டல இயக்குநா்கள் அருண்காந்தி, கமலப்பன், கும்பகோணம் மகாமகம் சிட்டி தலைவா் அரவிந்த்பாபு உள்ளிட்டோா் பங்கேற்று, குடிநீா் சுத்திகரிப்பானை பயன்பாட்டுக்கு வழங்கினா். இதில், ஊராட்சித் துணைத் தலைவா் ஸ்ரீதா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சின்னையன், ஆசிரியா்கள் செ. மணிமாறன், தி. ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT