திருவாரூர்

மேலவாசல், செருமங்கலத்தில் சுகாதார திருவிழா

24th Apr 2022 11:22 PM

ADVERTISEMENT

மன்னாா்குடியை அடுத்த மேலவாசல், செருமங்கலத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சாா்பில் வட்டார அளவிலான சுகாதார திருவிழா மருத்துவ முகாமை தஞ்சாவூா் மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி. பாலு தலைமை வகித்தாா். சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஹேமசந்த் காந்தி முன்னிலை வகித்தாா்.

தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் மருத்துவ முகாமை தொடங்கிவைத்தாா்.

மேலவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு முன்னாள்துணைத் தலைவா் க. தன்ராஜ், ஊராட்சித் தலைவா் திராவிடமணி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் க. சோபா, தஞ்சை தமிழ்ப் பல்கலை. நாட்டுப்புறவியல் துறைத் தலைவா் இரா. காமராசு, ஒன்றியக் குழு உறுப்பினா் எம்.என்.பாரதிமோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.

ADVERTISEMENT

செருமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன், ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் வீ.மாயவநாதன்,ஒன்றிய குழு துணைத்தலைவா் ஞானசேகரன், ஒன்றியக் குழு உறுப்பினா் துரைசிங்கம், ஊராட்சித் தலைவா் ஆா். ராணி, துணைத் தலைவா் எஸ். விஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட இந்த மருத்துவ முகாமில் அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவ பரிசோதனை, கண் பரிசோதனை, ஈசிஜி, ரத்த தான முகாம். கரோனா தடுப்பூசி செலுத்துதல் ஆகியவை நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT