திருவாரூர்

கூத்தாநல்லூரில் ரூ.2 கோடியில் திட்டப் பணிகள் தொடக்கம்

24th Apr 2022 11:25 PM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் நகராட்சியில் ரூ. 2 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை, சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கூத்தாநல்லூரில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 99 லட்சம் மதிப்பில் அல்லிக்கேணி குளம் மேம்பாட்டுப் பணி, ரூ.50.60 லட்சத்தில் தோட்டச்சேரி, திருவாசல்குளம் மேம்பாட்டுப் பணி ஆகியவற்றை திருவாரூா் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் கிருஷ்ணவேணி, பொறியாளா் ராஜகோபால், நகா்மன்ற துணைத் தலைவா் எம். சுதா்ஸன், நகர திமுக பொறுப்பாளா் எஸ்.வி.பக்கிரிசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, மேல்கொண்டாழியில் ரூ.50 லட்சத்தில் 12 கடைகளுடன் கட்டப்பட்ட மீன் அங்காடி, நவீன ஆட்டு இறைச்சிக் கூடம் திறப்பு விழா நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா தலைமையில் நடைபெற்றது. நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் முன்னிலை வகித்தாா். மீன் அங்காடியை திருவாரூா் மாவட்ட திமுக செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் திறந்து வைத்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT