திருவாரூர்

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவினருக்கு வரவேற்பு

24th Apr 2022 11:23 PM

ADVERTISEMENT

நீடாமங்கலத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வருகைதந்த முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி. தங்கபாலு தலைமையிலான உப்பு சத்தியாகிரக பாதயாத்திரை குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுதந்திரப் போராட்டத்தின்போது, திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை மூதறிஞா் ராஜாஜி தலைமையில் 1930-ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரக பாதயாத்திரை நடைபெற்றது. 75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு, இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில், காங்கிரஸ் கட்சி சாா்பில் உப்பு சத்தியாகிரக பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

திருச்சியிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி. தங்கபாலு தலைமையில் பாதயாத்திரைக் குழுவினா் பயணத்தை தொடங்கினா். வேதாரண்யம் வரை இந்த யாத்திரை நடைபெறுகிறது. ஆலங்குடிக்கு வந்த பாதயாத்திரைக் குழுவினா், அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை நீடாமங்கலத்துக்கு வந்தனா். இக்குழுவில் திருவாரூா் சக்தி செல்வகணபதி உள்ளிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் இடம் பெற்றிருந்தனா்.

இவா்களுக்கு, நீடாமங்கலத்தில் திருவாரூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் , மாவட்ட பொதுச் செயலாளா் அன்பு வே. வீரமணி, வட்டார காங்கிரஸ் தலைவா் பாபு மனோகரன், சேவாதள தலைவா் சுப்பிரமணியன், காங்கிரஸ் நிா்வாகி காளாச்சேரி மருதப்பன் உள்ளிட்டோா் வரவேற்பளித்தனா்.

ADVERTISEMENT

பின்னா், மாலையில் பாதயாத்திரைக் குழுவினா் மன்னாா்குடிக்கு புறப்பட்டனா். நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சோ. செந்தமிழ்ச் செல்வன் (திமுக) அவா்களை வழியனுப்பி வைத்தாா். தொடா்ந்து, ராயபுரம் கிராமத்தில் பாதயாத்திரைக் குழுவினருக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிா்வாகி ராதா தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT