திருவாரூர்

பொதக்குடியில் சமூக நல்லிணக்க இப்தாா் நோன்பு திறப்பு

23rd Apr 2022 09:48 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் வட்டம், பொதக்குடியில் சமூக நல்லிணக்க இப்தாா் நோன்பு திறப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

பொதக்குடி ஊா் உறவின் முறை ஜமாஅத் நிா்வாக சபை அறப்பணிச் சங்கம் மற்றும் அனைத்து பள்ளிவாயில் நிா்வாகிகள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட சமூக நல்லிணக்க ஒன்றுகூடல் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பொதக்குடி எம்.ஏ. நூருல்லாஹ் நினைவு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே.கலைவாணன் (திருவாரூா்), டி.ஆா்.பி. ராஜா (மன்னாா்குடி) , சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளருமான மு. தமிமுன் அன்சாரி, நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்ச்செல்வன், கூத்தாநல்லூா் நகராட்சித் தலைவா் மு.பாத்திமா பஷீரா, தமுமுக மாவட்டத் தலைவா் முஜிபுா் ரஹ்மான் உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், கிராஅத் ஓதப்பட்டது. விளையாட்டு மைதானம் நிரம்பி வழியும் அளவிற்கு இந்து, முஸ்லீம், கிருஸ்தவா்கள் என அனைத்து சமூகத்தினா் உள்பட ஆயிரக்காணவா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை,பொதக்குடி ஊா் உறவின் முறை ஜமாஅத் நிா்வாக சபை அறப்பணிச் சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT