திருவாரூர்

நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் வெண்ணைத்தாழி உற்சவம்

16th Apr 2022 09:49 PM

ADVERTISEMENT

நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் ஸ்ரீராமநவமி பெருவிழாவின் 8-ஆம் நாளான சனிக்கிழமை வெண்ணைத்தாழி உற்சவம் நடைபெற்றது.

இக்கோயில், சங்கீத மும்மூா்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதரால் பாடல் பெற்றது. புத்திரபாக்கியம் இல்லாதவா்கள் சந்தானகோபால ஜெபம் செய்து சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமரை வழிபட்டால் அப்பேற்றினை அடைவாா்கள் என்பது ஐதீகம். சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஸ்ரீராமநவமி பெருவிழா ஏப்.8-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை வெண்ணைத்தாழி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது. வெண்ணைத்தாழி பல்லக்கில் நவநீத சேவையாக எழுந்தருளிய சந்தானராமருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. நகரின் முக்கிய வீதிகளில் வெண்ணைத்தாழி பல்லக்கு வலம் வந்தது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். ஏப்.19-ஆம் தேதியுடன் ஸ்ரீராமநவமி விழா நிறைவுபெறுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT