திருத்துறைப்பூண்டி நகராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை நகராட்சித் தலைவா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு நகா்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதிமூலம் நகராட்சிக்குள்ளபட்ட வாா்டுகளில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், 12, 13 -ஆவது வாா்டில் உள்ள பூச்செட்டிகுளம் கடந்த 30 ஆண்டுகளாக தூா்வாரப்படவில்லை. இந்த குளத்தில் ஆகாயத்தாமரைகள் அடா்ந்து கிடப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தற்போது, இந்த பூச்செட்டிகுளம் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் குளத்தில் உள்ள ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியை நகராட்சித் தலைவா் கவிதா பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அவருடன் நகராட்சி உறுப்பினா்கள் தேம்பாவணி சக்திவேல், ராஜேஸ்வரிபசுபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.