திருவாரூர்

ரத்த தான முகாம்

14th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிா் கல்லூரியில், மிஸ்கின் நினைவுதின ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கல்லூரி அறங்காவலா் குழு உறுப்பினா் பெஜிலா பெரோஸ் தலைமை வகித்தாா். இதில், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் மாவட்டச் செயலாளா் ஜே. வரதராஜன், யூத் ரெட்கிராஸ் அமைப்பாளா் கே. ஏழுமலை ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றுப் பேசினா். முகாமில், கல்லூரி முதல்வா் எஸ். ஸ்ரீதேவி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் ரத்த தானம் செய்தனா். இதில், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவா் பிரீதா, முதலுதவி பயிற்சியாளா் ஜே. பெஞ்சமின், நுகா்வோா் மன்ற பொதுச் செயலா் ஆா். ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT