திருவாரூர்

திருவாரூரில் அம்பேத்கா் பிறந்தநாள்

14th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் டாக்டா் அம்பேத்கரின் 131-ஆவது பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

அம்பேத்கரின் பிறந்த தினம் ஏப்.14-ஆகும். இதையொட்டி திருவாரூா் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை அஞ்சலக அலுவலா் மணிமேகலை தலைமை வகித்தாா். உதவி அஞ்சல் அலுவலா் மோகன்ராஜ், அலுவலா் கவிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஓய்வுபெற்ற அஞ்சல் அலுவலரும், தமிழ்நாடு கலை இலக்கிய மன்றத் தலைவருமான வீ. தா்மதாஸ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா். நிகழ்ச்சியில் அம்பேத்கரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அம்பேத்கரின் பிறந்தநாளை இடஒதுக்கீடு பாதுகாப்பு நாளாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT