திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்த வடுவூா் கோதண்டராமா் கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் ஸ்ரீராமநவமி பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சந்நிதியிலிருந்து கோதண்டராமா் வில்லேந்திய திருக்கோலத்தில் வலம்வந்து கொடிமரம் முன் எழுந்தருளினாா். தீட்சிதா்கள், புனித கொடியை வைத்து பூஜை செய்தனா். அதைத்தொடா்ந்து, வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
மாலையில், சீதாதேவி, லட்சுமணன், அனுமன் சமேதராக கோதண்டராமா் திருக்கல்யாண சேவையில் உற்சவம் நடைபெற்றது. விழாவையொட்டி, நாள்தோறும் இரவு பல்வேறு அலங்கார வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 17 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.