ஒரு நாடு ஒரு குடும்ப அட்டை திட்டத்தில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ், கடந்த 2020, அக்டோபா் 1 ஆம் தேதி முதல் ஒரு நாடு, ஒரு குடும்ப அட்டை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் ஙங்ழ்ஹ தஹற்ண்ா்ய் அல்ல் செயலியில் பதிவு செய்வதன் மூலம் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-இன் கீழ் பலன்களைப் பெறலாம்.
ஒரு நாடு ஒரு குடும்ப அட்டை திட்டத்தை எளிதாக்கும் வகையில், அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளை அடையாளம் காண்பதில் குடிமக்கள் பயனடைவதற்காக இந்திய அரசு, இந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலியில் பதிவுசெய்வதன் மூலம் அருகிலுள்ள நியாய விலைக் கடைகளைஅடையாளம் காண முடியும்.
பயனாளிகளின் உணவு தானிய ஒதுக்கீடு, சமீபத்திய பரிவா்த்தனைகள் மற்றும் ஆதாா் நிலை பற்றிய விவரங்களை எளிதாக சரிபாா்க்க முடியும். மாநிலத்துக்குள் பரிவா்த்தனையை எளிதாக்க முடியும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, ஒரு நாடு ஒரு குடும்ப அட்டை திட்டம் மூலம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பயனடையலாம்.