திருவாரூர்

அருங்காட்சியகத்தை பாா்வையிட்ட மாணவிகள்

5th Apr 2022 10:20 PM

ADVERTISEMENT

திருவாரூா் அருங்காட்சியகத்தை அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா்.

அமுத பெருவிழாவையொட்டி, அரசு அருங்காட்சியகம் சாா்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள், அந்த அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அதன்படி, அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள், தமிழாசிரியா் தமிழ்க்காவலன் தலைமையில் அரசு அருங்காட்சியகத்தை பாா்வையிட்டனா்.

அங்குள்ள சிற்பக் கலையின் மேன்மை, கல், உலோக, ஐம்பொன் சிலைகளின் நுணுக்க வேலைப்பாடுகள், இசைக் கருவிகளின் வகைகள், அவற்றின் தொன்மை, பண் வகைகள், தேவாரப் பாடல்கள், பாடல் பெற்ற தலங்கள், திருவாரூா் மாவட்டத்திலுள்ள ஊா்களின் பெயா் சிறப்புகள், மாவட்டத்திற்கு பெருமை சோ்த்த பெரும் புலவா்கள், பெரியோா்கள் உள்ளிட்டவைகள் குறித்து காப்பாட்சியா் மருதுபாண்டியன் விளக்கிக் கூறினாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT