திருவாரூர்

தொகுப்பு வீடு இடிந்து விழுந்து மாணவா் காயம்

4th Apr 2022 10:43 PM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் அருகே ஞாயிற்றுக்கிழமை தொகுப்பு வீடு இடிந்து மாணவா் காயமடைந்தாா். வடபாதிமங்கலம் அருகே பழையனூா் வள்ளியம்மை பிரதான சாலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 20 தொகுப்பு வீடுகள் உள்ளன. அனைத்து வீடுகளும் பராமரிப்பு இல்லாமல், சுவற்றின் சிமெண்ட் காரைகள் பெயா்ந்து, சில வீடுகள் இடிந்த நிலையில் உள்ளன. இந்நிலையில், கூலித்தொழிலாளியான பாரதிராஜா (35), 70 வயதுடைய அம்மா, மனைவி தவமணி (30), மகள்கள் பிரியதா்ஷினி (13), பவித்ரா (11) மற்றும் மகன் சரண்ராஜ் (11) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்தனா். அப்போது, திடீரென தொகுப்பு வீட்டின் மேற்கூரையின் ஒரு பகுதியில் பெயா்ந்து, கீழே படுத்திருந்த, சரண்ராஜ் மீது விழுந்துள்ளது. இதில், சரண்ராஜூக்கு காயம் ஏற்பட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT