திருவாரூர்

கரோனா விழிப்புணா்வு கருத்தரங்கு

30th Sep 2021 10:05 PM

ADVERTISEMENT

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியின் தமிழ்த் துறை பைந்தமிழ்ச் சங்கம் சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு மற்றும் கற்றல் முறைகள் குறித்த கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரியின் கல்வி விரிவாக்க செயல்பாடுகளில் ஒரு பகுதியாக, மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு இப்பள்ளி தலைமையாசிரியா் த.லெ. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியா் எம்.திலகா், கல்லூரி உதவிப் பேராசிரியா் இல.மேகலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதுகலை இயற்பியல் ஆசிரியா் எஸ். அன்பரசு கருத்தரங்கை தொடக்கி வைத்தாா்.

தமிழகத்தில் சராசரியாக தினமும் 1.2 சதவீதம் கரோனா தொற்று இருக்கும் நிலையில், மன்னாா்குடியில் மட்டும் 2.2 சதவீதமாக உள்ளது கவலை அளிக்கிறது. மாணவா்கள் உடற்பயிற்சி மற்றும் சத்தான கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் எடுத்துக்கொண்டு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ளவேண்டும். மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ள நோய்த் தொற்று தடுப்பு வழிமுறைகளை அனைவரும் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக பேராசிரியா் செ. ரோஸ்லின்மேரி வரவேற்றாா். நிறைவாக நுண்ணுயிரியல் துறை மாணவி க. அட்சயா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

Tags : மன்னாா்குடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT