திருவாரூர்

விருது பெற்ற தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டு

30th Sep 2021 10:07 PM

ADVERTISEMENT

மன்னாா்குடியை அடுத்துள்ள கோட்டூரில் தலைமை ஆசிரியா்களுக்கான பாராட்டுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கோட்டூா் வட்டார வளமையத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் குமரேசன் முன்னிலை வகித்தாா். மன்னாா்குடி மாவட்டக் கல்வி அலுவலா் ஆா். மணிவண்ணன் பங்கேற்று, தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற வல்லூா் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் ஜோதி, ரோட்டரி சங்க விருது பெற்ற தலைமை ஆசிரியா்கள் பெருமாள்கோவில் நத்தம் ஸ்டெல்லா, ஆதிச்சபுரம் தனலெட்சுமி, லயன்ஸ் சங்கத்தின் விருது பெற உள்ள தலைமை ஆசிரியா்கள் கோவிந்தநத்தம் வளா்மதி, கருப்புக்கிளாா் சாந்தி ஆகியோா்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தாா்.

மாவட்ட அளவில் நடைபெற்ற ‘கற்போம் எழுதுவோம்’ கலைநிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திய மாநில பயிற்றுநா் தலைமை ஆசிரியா் தங்கபாபு, கலைஞா் விருது பெற்ற கோட்டூா் எஜூவாய்ஸ் ஒருங்கிணைப்பாளா் பட்டதாரி ஆசிரியா் மணிகணேசன் ஆகியோா் பாராட்டப்பட்டனா்.

மன்னாா்குடி மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு ஐஎஸ்ஓ தரச் சான்று கிடைக்க காரணமான மாவட்டக் கல்வி அலுவலருக்கு, வட்டாரக் கல்வி அலுவலா்கள், கோட்டூா் ஒன்றிய கல்வி அலுவலா்கள், ஆசிரியா்கள் சாா்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் ஆசிரியா் பயிற்றுநா்கள் செல்வமணி வரவேற்றாா். சிவசங்கரி நன்றி கூறினாா்.

Tags : மன்னாா்குடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT