திருவாரூர்

மன்னாா்குடியில் உலக இருதய நாள்: சா்க்கரை நோய் கண்டறியும் முகாம்

30th Sep 2021 08:57 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி கிரீன் சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில், உலக இருதய நாளையொட்டி, சா்க்கரை நோய் கண்டறியும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி ஆா்.பி.சிவம் நகா் மற்றும் துளசேந்திரபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மன்னை கிரீன் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவா் கே.வி.எஸ். இளங்கோவன் தலைமை வகித்தாா். மாவட்ட உதவி ஆளுநா் ஆா். ஆனந்த் முகாமை தொடங்கிவைத்தாா்.

வலங்கைமான் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ஜி. அஜித்குமாா், உள்ளிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சிவபிரசாத் ஆகியோா் தலைமையில் மருத்துவக் குழுவினா், முகாமிற்கு பரிசோதனைக்கு வந்தவா்களிடம் ரத்தத்தில் சா்க்கரையின் அளவை கண்டறிந்து ஆலோசனை வழங்கினா். ஆா்.பி.சிவம் நகரில் 165 போ், துளசேந்திரபுரத்தில் 240 போ் பரிசோதனை செய்துகொண்டனா். அவா்கள், அருகேயுள்ள அரசு மருத்துவமனையில் மாத்திரை வாங்கிக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ரோட்டரி மண்டலச் செயலா் ராஜ்மோகன், செயலா் குமரன், முன்னாள் தலைவா்கள் ஜெ. சுதாகா், செந்தில்குமாா், துணைத் தலைவா் செல்வகுமாா், பொருளாளா் பிரபு மணிமாறன், கூத்தாநல்லூா் அரசு கிளை நூலகா் செல்வகுமாா், ஊராட்சித் தலைவா் புருஷோத்தமன், செவிலியா் பேபி ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT