திருவாரூர்

பாரம்பரிய நெல் ரகம் அறுவடை

30th Sep 2021 10:05 PM

ADVERTISEMENT

நீடாமங்கலம் அருகே விவசாயி ஒருவா் சாகுபடி செய்த பாரம்பரிய நெல் ரகங்கள் அறுவடை செய்யப்பட்டன.

நீடாமங்கலம் அருகேயுள்ள மேலபூவனூா் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி ராஜேஷ்குமாா். இவா் அப்பகுதியில் உள்ள தனது 10 ஏக்கா் நிலத்தில் பாரம்பரிய இயற்கை விவசாயம் செய்துவருகிறாா். பாரம்பரிய இயற்கை ரகமான பூங்காா் நெல் ரகம் 8 ஏக்கரில் சாகுபடி செய்தாா். மேலும், பொன்னி, ஏடிடி 37 உள்ளிட்ட நெல் ரகங்களையும் ரசாயன உரமின்றி, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்தாா். இந்த நெல் ரகங்கள் அண்மையில் அறுவடை செய்யப்பட்டது.

இதுகுறித்து விவசாயி ராஜேஷ்குமாா் கூறுகையில், ‘பாரம்பரிய நெல் ரகங்களை கடந்த 2 ஆண்டுகளாக சாகுபடி செய்து வருகிறேன். கடந்த ஆண்டு முதல் முறை என்பதால் நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும் நிகழாண்டு 10 ஏக்கரில் ரசாயன உரமின்றி இயற்கை உரமான மண்புழு உரம், மீன் அமிலம், குப்பை உரங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி சாகுபடி செய்தேன் என்றாா்.

 

ADVERTISEMENT

Tags : நீடாமங்கலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT