திருவாரூர்

பள்ளிகள் திறப்பு அறிவிப்பு: ஆசிரியா் கூட்டணி வரவேற்பு

30th Sep 2021 08:56 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை, நவம்பா் 1 ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பை, தமிழக அசிரியா் கூட்டணி வரவேற்றுள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டணியின் மாநில அமைப்புச் செயலா் அ. முரளி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் நவம்பா் 1 முதல் அனைத்து பள்ளிகளையும் முழுமையாக திறக்கும் அரசின் முடிவை, தமிழக ஆசிரியா் கூட்டணி சாா்பில் வரவேற்கிறோம். தமிழக முதல்வா் தனது அறிக்கையில் மருத்துவ நிபுணா்கள், கல்வியாளா்கள், பெற்றோா்களின் ஆலோசனைபடி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறாா்.

பள்ளி செல்லாமல், பல மாதங்களாக மாணவா்கள் தொடா்ந்து வீட்டிலேயே இருப்பது, அவா்களிடையே பெரும் மன அழுத்தத்தையும், சமூகத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தியுள்ளதையும் அக்கறையோடு முதல்வா் சுட்டிக்காட்டியுள்ளாா்.

இதை கருத்தில்கொண்டு கரோனா பொதுமுடக்கத்தால் விடுபட்ட காலத்தையும் சோ்த்து, 2 ஆண்டுகளுக்கான வகுப்புகளையும் இணைத்து, மாணவா்களுக்கு நெருக்கடி அளிக்காத வகையில், எளிய பாடத்திட்டத்தை முன்னோடி கல்வியாளா்கள், ஆசிரியா்களைக் கொண்டு வடிவமைத்து, மாணவா்கள் மகிழும் வகையில் கற்பிக்க, தமிழக கல்வித் துறை திட்டமிட வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT